பொது செய்தி

தமிழ்நாடு

காண்டூர் கால்வாயில் மண் சரிவால் பாதிப்பு: நீர் திறப்பு நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி

Added : அக் 06, 2021
Share
Advertisement
உடுமலை:பி.ஏ.பி., திட்டம், காண்டூர் கால்வாயில் மண் சரிவு மற்றும் மரம் விழுந்ததால், தண்ணீர் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன; இந்த நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது.அதன் அடிப்படையில், நான்காம் மண்டல
 காண்டூர் கால்வாயில் மண் சரிவால் பாதிப்பு: நீர் திறப்பு நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி

உடுமலை:பி.ஏ.பி., திட்டம், காண்டூர் கால்வாயில் மண் சரிவு மற்றும் மரம் விழுந்ததால், தண்ணீர் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன; இந்த நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது.அதன் அடிப்படையில், நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஆக., 6ம் தேதி முதல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.மண்டல பாசன காலமான, 135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு, 5 சுற்றுக்களாக, மொத்தம், 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.பருவ மழைகள் திருப்தியாக பெய்து, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததால், சுற்றுக்கள் இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக, திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாயில், 39வது கி.மீ.,ல், மண் சரிவு ஏற்பட்டு, பெரிய அளவிலான கல் விழுந்தது. மேலும், ஒரு சில இடங்களில் மரங்கள் வேருடன் சரிந்து, கால்வாயில் விழுந்தது. இதனையடுத்து, 3ம் தேதி இரவு, சர்க்கார்பதியிலிருந்து நீர் எடுப்பது நிறுத்தப்பட்டு, கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்தன.நேற்றுமுன்தினம், மண் சரிவு மற்றும் மரங்கள் அகற்றும் பணிகள் துவங்கி, நேற்று மதியம் நிறைவடைந்தது.
கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி கூறுகையில், 'காண்டூர் கால்வாயில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மதியம் முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், பாசனத்திற்கு நீர் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது,' என்றார்.
திருமூர்த்தி அணையில், நேற்று காலை நிலவரப்படி, அணையிலிருந்து பாசனத்திற்கு, பிரதான கால்வாயில், 890 கன அடி நீரும், உடுமலை கால்வாயில், 156 கன அடி நீரும், தளி கால்வாயில், 57 கன அடி நீரும், குடிநீருக்கு, 21 கன அடி நீர், இழப்பு என, 1,126 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நல்லாறு அணைப்பகுதியில், 15 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X