பொது செய்தி

தமிழ்நாடு

'உரிமம் இன்றி விதைகள் விற்றால் நடவடிக்கை'

Added : அக் 06, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்;''உரிமம் இல்லாமல் விதைகள் விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உரிமம் பெற்ற, அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே, விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும். விற்பனை உரிமம், விதைகள் இருப்பு உள்ளிட்ட தகவல்களை

மடத்துக்குளம்;''உரிமம் இல்லாமல் விதைகள் விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உரிமம் பெற்ற, அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே, விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும். விற்பனை உரிமம், விதைகள் இருப்பு உள்ளிட்ட தகவல்களை விற்பனை மையங்களில் பார்வைக்கு தெரியும் படி எழுதி வைத்திருக்க வேண்டும்.அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. உரிமம் இல்லாமல் விதைகள் விற்பனை செய்பவர்கள் மீது, கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.புதிதாக உரிமம் பெற விரும்புவோர், மூன்று போட்டோ, விற்பனை மையத்தின் இருப்பிட வரைபடம், நில ஒப்பந்த நகல், வரி ரசீது ஆகியவற்றுடன், கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில், விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X