வேடசந்துார்:வேடசந்துார் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வேன் கவிழ்ந்ததால் அரிசி கடத்தல்வெளிச்சத்திற்கு வந்தது.
மதுரையை சேர்ந்தவர் சுப்பிரமணி 54. ரேஷன் அரிசியை வாங்கி நாமக்கல்லுக்கு கடத்துவது இவரது தொழில். நேற்று மாலை 30 மூடை ரேஷன் அரிசியை, வேனில் ஏற்றி வேடசந்துார் வழியாக நாமக்கல்லுக்கு கொண்டு சென்றார். வாகனத்தை மதுரை பெருங்குடியை சேர்ந்த வல்லரசு 22, ஓட்டிச்சென்றார்.
வேடசந்துார் மினுக்கம்பட்டி பிரிவு அருகே சென்றபோது வேனின் வலதுபுற பின் டயர் வெடித்தது. நிலைதடுமாறிய வேன்சென்டர் மீடியனில் ஏறி நடுரோட்டில் கவிழ்ந்தது. போக்குவரத்து பாதித்ததால் போலீசார் அங்கு வந்தனர்.
கவிழ்ந்த வேனை மீட்கும்போது, ரேஷன் அரிசி இருந்ததும் அதனை கோழித் தீவனம் என்ற பெயரில் ரசீதுகளை தயார் செய்துகொண்டு சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE