பொது செய்தி

தமிழ்நாடு

3வது வாரமாக மாட்டு வர்த்தகம் மந்தம்: கேரள வியாபாரிகள் வருகை எதிர்பார்ப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பாரம்பரியம் மிக்க பொள்ளாச்சி மாட்டு சந்தை, கொரோனா கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், கடந்த மூன்று வாரங்களாக செவ்வாய், வியாழக்கிழமைகளில் செயல்படுகிறது.அதே சமயம், தொற்று பரவல் கட்டுப்பாட்டு விதிகளின் காரணமாக, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து, வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.இதனால், வர்த்தகத்தில் தொடர்ந்து மந்த நிலை காணப்படுகிறது.

நேற்று நடந்த சந்தைக்கு, 1,500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வழக்கமாக, மூவாயிரம் மாடுகள் வரும் சந்தைக்கு, வரத்து பாதியாக குறைந்துள்ளது.இவற்றில், பசு மாடுகள், 30 ஆயிரம் - 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. காளை, 40 ஆயிரம் - 45 ஆயிரம்; எருமை, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம்; முரா எருமை, 35 ஆயிரம் முதல், 40 ஆயிரம்; ஜெர்சி பசுக்கள், 15 ஆயிரம் - 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றன.வழக்கமாக, ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவின்றி வர்த்தகம் நடக்கும் மாட்டுச் சந்தையில், கேரள மாநில வியாபாரிகள் வருகை இல்லாததால், மூன்று கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடக்கிறது.தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கேரள வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், என, விவசாயிகள், மாட்டு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X