திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் பல இடங்களில் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் மொத்தமாக வாங்கி கடத்தல் செய்வோரை போலீசார் கண்காணித்துவந்தனர்.
வண்ணார்பேட்டையில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் போலீசார் நடத்திய சோதனையில் நுாற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் இருந்தன. ராஜா என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.