பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் 4வது நாளாக போராட்டம்: வனத்துறைக்கு ஒத்துழைக்க 'அட்வைஸ்'

Added : அக் 06, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை அருகே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பழங்குடியினரிடம், சப் - கலெக்டர் நேற்று பேச்சு நடத்தினார்.வால்பாறை, கல்லார் செட்டில்மென்ட்டில், காடர் இனத்தை சேர்ந்த பழங்குடியினர், 23 குடும்பங்கள் வசித்து வந்தனர். கடந்த, 2018ல் கனமழைக்கு, அவர்களது வீடுகள் மண்ணில் புதைந்தன.அவர்களுக்கு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட தெப்பக்குளம் மேடு பகுதியில் வீடு கட்ட இடம் வழங்க
 பழங்குடியினர் 4வது நாளாக போராட்டம்: வனத்துறைக்கு ஒத்துழைக்க 'அட்வைஸ்'

வால்பாறை:வால்பாறை அருகே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பழங்குடியினரிடம், சப் - கலெக்டர் நேற்று பேச்சு நடத்தினார்.வால்பாறை, கல்லார் செட்டில்மென்ட்டில், காடர் இனத்தை சேர்ந்த பழங்குடியினர், 23 குடும்பங்கள் வசித்து வந்தனர். கடந்த, 2018ல் கனமழைக்கு, அவர்களது வீடுகள் மண்ணில் புதைந்தன.அவர்களுக்கு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட தெப்பக்குளம் மேடு பகுதியில் வீடு கட்ட இடம் வழங்க கோரி, பல்வேறு போராட்டம் நடத்தியும், வனத்துறையினர் இடம் வழங்கவில்லை.கடந்த, 2ம் தேதி முதல், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.தெப்பக்குளம் மேடு பகுதிக்கு சென்ற, பொள்ளாச்சி சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், பேச்சு நடத்தினார். சப் - கலெக்டர் பேசுகையில், ''தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், கொஞ்சம் காலதாமதமாகும். அது வரை, தொழிலாளர்களின் குடியிருப்பிலேயே வசிக்க வேண்டும்.விரைவில் அனைவருக்கும் வீடு கட்ட இடம் வழங்கப்படும். எனவே போராட்டத்தை கைவிட்டு, வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.போராட்ட ஒருங்கிணைப்பாளர் தனராஜ், மூப்பன் சக்திவேல் ஆகியோர் கூறுகையில், 'பாரம்பரியமாக வசித்து வந்த இடத்தில் வீடு கட்ட இடம் கேட்டோம். வீடு கட்ட இடம் வழங்கும் வரை, தெப்பக்குளம் மேடு பகுதியை விட்டு செல்லமாட்டோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X