பொது செய்தி

தமிழ்நாடு

புலிகள் காப்பகத்தில் சைக்கிள் பேரணி

Added : அக் 06, 2021
Share
Advertisement
உடுமலை:வன விலங்கு வார விழாவை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.வனம் மற்றும் வன விலங்குகளை காப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அக்., முதல் வாரம், 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை வன விலங்கு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டத்தில், வன விலங்கு வார
 புலிகள் காப்பகத்தில்  சைக்கிள் பேரணி

உடுமலை:வன விலங்கு வார விழாவை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.வனம் மற்றும் வன விலங்குகளை காப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அக்., முதல் வாரம், 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை வன விலங்கு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டத்தில், வன விலங்கு வார நிகழ்ச்சிகள், 2ம் தேதி முதல் நடந்து வருகிறது.நேற்று, வனத்தின் ஆதாரமாக உள்ள வன விலங்குகளை காப்பதன் அவசியம், வனத்தை காப்பது, வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது, அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் பங்கேற்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.சின்னாறு ரோடு, ஒன்பதாறு வனத்துறை சோதனை சாவடி அருகே துவங்கிய பேரணியை, ஆனைமலை புலிகள் காப்பகம், மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.சின்னாறு ரோடு, ஒன்பதாறு செக்போஸ்ட், சாயப்பட்டறை, அமராவதி அணை வழியாக சென்ற பேரணி, முதலை பண்ணை பகுதியில் நிறைவடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X