பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் ஈரப்பதம்: கொப்பரை விலை சரிவு

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை விலை சரிந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 241 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 91 முதல், 96.40 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 216 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 72.50 முதல், 84.20 ரூபாய் விலை
 மழையால் ஈரப்பதம்: கொப்பரை விலை சரிவு

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை விலை சரிந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 241 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 91 முதல், 96.40 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 216 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 72.50 முதல், 84.20 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம், 457 கொப்பரை மூட்டைகளை, 84 விவசாயிகள் கொண்டு வந்தனர், ஒன்பது வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொப்பரை, 146 மூட்டைகள் வரத்து குறைந்தது. விலையும், கிலோவுக்கு, 6.10 ரூபாய் சரிந்தது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கூறுகையில், ''மழையால் கொப்பரை உலர வைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, கொப்பரையில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் விலை சரிந்து வருவதால், கொப்பரை விலையும் சரிந்துள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X