சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர் கொலை: கடை அடைத்து போராட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:டாஸ்மாக் ஊழியர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து, பொள்ளாச்சியில் கடைகளை அடைத்து ஊழியர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில், பணி முடிந்து வீடு திரும்பும் போது, டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் என்பவர், மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். வெட்டப்பட்ட மற்றொரு ஊழியரும், சிகிச்சை பெறுகிறார்.இந்த சம்பவத்தை கண்டித்து, நேற்று மாநிலம்
 டாஸ்மாக் ஊழியர் கொலை: கடை அடைத்து போராட்டம்

பொள்ளாச்சி:டாஸ்மாக் ஊழியர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து, பொள்ளாச்சியில் கடைகளை அடைத்து ஊழியர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில், பணி முடிந்து வீடு திரும்பும் போது, டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் என்பவர், மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். வெட்டப்பட்ட மற்றொரு ஊழியரும், சிகிச்சை பெறுகிறார்.இந்த சம்பவத்தை கண்டித்து, நேற்று மாநிலம் முழுக்க டாஸ்மாக் கடைகளை அடைத்து, ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.கோவை தெற்கு மாவட்ட, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில், காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை, இரண்டு மணி நேரம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அதையடுத்து, கடை திறந்த ஊழியர்கள், கறுப்பு கொடி அணிந்து பணியில் ஈடுபட்டனர்.டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்து பணம் கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்கதையாகி, பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X