பொது செய்தி

தமிழ்நாடு

19 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியத்தில், இன்று தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இம்மையங்களில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாராக உள்ளது.உடுமலை நகராட்சியில், நகராட்சி பழைய அலுவலகத்தில், 1,290 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 400 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட

உடுமலை:உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியத்தில், இன்று தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இம்மையங்களில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாராக உள்ளது.உடுமலை நகராட்சியில், நகராட்சி பழைய அலுவலகத்தில், 1,290 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 400 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.சத்திரம் வீதி நகராட்சி பள்ளியில், 1,260 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 300 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.உடுமலை ஒன்றியத்தில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 390 பேருக்கு கோவிஷீல்டு, 250 பேருக்கு கோவாக்சின் செலுத்தப்பட உள்ளது.பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 350 பேருக்கு கோவிஷீல்டு, 170 பேருக்கு கோவாக்சின், அமராவதி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 220 பேருக்கு கோவிஷீல்டு, 70 பேருக்கு கோவாக்சின், செல்லப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 230 கோவிஷீல்டு, 100 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில், பெதப்பம்பட்டி, ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 270 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், அணிக்கடவு பள்ளியில், 500 பேருக்கு, கோவிஷீல்டு, 200 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.மடத்துக்குளம் ஒன்றியத்தில், ருத்ராபாளையம், கண்ணாடிபுத்துார் பள்ளிகளில், தலா, 300 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 50 பேருக்கு, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. செங்கண்டிபுதுார் பள்ளியில், 260 கோவிஷீல்டு, 50 கோவாக்சின், காரத்தொழுவு, 340 கோவிஷீல்டு, 50 கோவாக்சின், கணியூர், துங்காவி, குமரலிங்கம், பாப்பான்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், தலா 50 கோவிஷீல்டு மற்றும், 20 கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.உடுமலை அரசு மருத்துவமனையில், கோவிஷீல்டு தடுப்பூசி, 200 பேருக்கும், ஜல்லிபட்டி, மடத்துக்குளம் அரசு மருத்துவமனைகளில், தலா, 500 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X