பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 14 பேருக்கு தொற்று

Added : அக் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வெங்கட்ரமணன் வீதி, பழனியப்பன் வீதியில், தலா ஒருவர் வீதம், இரண்டு பேருக்கு நேற்று, கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.வடக்கு வட்டாரத்தில், நெகமம், குள்ளக்காபாளையத்தில் மூன்று பேர்; தெற்கு வட்டாரம் சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டியில்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வெங்கட்ரமணன் வீதி, பழனியப்பன் வீதியில், தலா ஒருவர் வீதம், இரண்டு பேருக்கு நேற்று, கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.வடக்கு வட்டாரத்தில், நெகமம், குள்ளக்காபாளையத்தில் மூன்று பேர்; தெற்கு வட்டாரம் சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டியில் இரண்டு பேருக்கு தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, மொத்தம், ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.கிணத்துக்கடவு தாலுகாவில், காந்திநகர், லட்சுமிநகர், எஸ். மேட்டுப்பாளையம் கிராமங்களை சேர்ந்த, மூன்று பேருக்கு நேற்று, தொற்று பரவல் உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த, ஆறு பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.ஆனைமலை தாலுகாவில், கோட்டூர் பகுதியில் இரண்டு பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதித்த பகுதிகளில், சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சியினர், கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.வால்பாறை தாலுகாவில், நகரப்பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அதே வீட்டில், நேற்று இருவருக்கு தொற்று உறுதியானது.வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, நான்கு தாலுகாக்களில், நேற்று, 14 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று பாதித்தோரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தொற்று உறுதியானவர்கள் அவர்களாகவே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும். பெரும்பாலானவர்கள் மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். இதனால், தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X