ஆப்கனில் 20 ஆண்டு படிப்பு 'அவுட்': தலிபான்கள் அடாவடி

Added : அக் 06, 2021
Share
Advertisement
காபூல்:ஆப்கனில் கடந்த 2000 முதல் 2020ம் ஆண்டு வரை பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.ஆப்கனில் இருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடன் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின் ஆண்கள் தாடியை குறைக்கவோ, மழிக்கவோ கூடாது, பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் பல்வேறு உத்தரவுகளை

காபூல்:ஆப்கனில் கடந்த 2000 முதல் 2020ம் ஆண்டு வரை பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கனில் இருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடன் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின் ஆண்கள் தாடியை குறைக்கவோ, மழிக்கவோ கூடாது, பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி கூறியதாவது: ஆப்கனில் 20 ஆண்டுகளாக தலிபான்கள் ஆட்சியில் இல்லை. அந்த காலகட்டத்தில் பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் படித்து மாணவர்கள் பெற்ற பட்டத்தால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அந்த முதுகலைப் படிப்புகள், முனைவர் பட்டங்கள் எல்லாம் மதரஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளைவிட மதிப்பு குறைவானவை.

அதனால் தலிபான்களின் தேசத்துக்குப் பயன்படும், மதிப்புகளை உணர்ந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை பணியமர்த்த இருக்கிறோம், என்றார்.இதன் மூலம் 20 ஆண்டுகளில் படித்த யாருக்கும் எந்த வேலையும் வழங்கப்போவதில்லை என தலிபான்கள் பகிரங்கமாக அறிவித்துவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X