சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தல் பிரசாரம்: அரசியல் கட்சியினர் முற்றுகை

Added : அக் 06, 2021
Share
Advertisement
பந்தலுார்:கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தின், 11வது வார்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சியினர் களம் இறங்கி உள்ளனர்.கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தின், 11வது வார்டில் தி.மு.க., வை சேர்ந்த ஆனந்தராஜ் வெற்றிபெற்று கவுன்சிலராக இருந்தார். இவர், கடந்த டிச., மாதம், 13ஆம் தேதி யானை தாக்கியதில் தனது மகனுடன் உயிரிழந்தார். தொடர்ந்து, இந்த வார்டுக்கான இடைத்தேர்தல் வரும், 9-ம் தேதி நடக்க

பந்தலுார்:கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தின், 11வது வார்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சியினர் களம் இறங்கி உள்ளனர்.கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தின், 11வது வார்டில் தி.மு.க., வை சேர்ந்த ஆனந்தராஜ் வெற்றிபெற்று கவுன்சிலராக இருந்தார். இவர், கடந்த டிச., மாதம், 13ஆம் தேதி யானை தாக்கியதில் தனது மகனுடன் உயிரிழந்தார். தொடர்ந்து, இந்த வார்டுக்கான இடைத்தேர்தல் வரும், 9-ம் தேதி நடக்க உள்ளது.அதில், தி.மு.க., சார்பில் பாரதி, அ.தி.மு.க. சார்பில் லினிஸ், நாம் தமிழர்கட்சி சார்பில் தமிழ் செல்வன், சுயேச்சை வேட்பாளர்களாக அசோக்குமார், பாலசுப்ரமணியம், பூவேந்திரன்; ஆகியோர் போட்டியிடுகின்றனர்.தி.மு.க., சார்பில் எம்.பி.,ராஜா சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்த நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,ஜெயசீலன் உள்ளிட்ட கட்சியினர் வார்டில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 11வது வார்டு பரபரப்பாக காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X