அனுமதியில்லாமல் இயங்கிய பொக்லைன் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியில்லாமல் இயங்கிய பொக்லைன் பறிமுதல்

Added : அக் 06, 2021
Share
கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் அனுமதியில்லாமல் இயங்கிய, மினி 'பொக்லைன்' பறிமுதல் செய்யப்பட்டது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக, அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களை சமன் செய்யவும், கட்டுமானத்திற்காகவும் பொக்லைன் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கோத்தகிரி நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட, ஜக்கலோடை பகுதியில், அனுமதி இல்லாமல் மினி பொக்லைன்
 அனுமதியில்லாமல் இயங்கிய  பொக்லைன் பறிமுதல்

கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் அனுமதியில்லாமல் இயங்கிய, மினி 'பொக்லைன்' பறிமுதல் செய்யப்பட்டது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக, அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களை சமன் செய்யவும், கட்டுமானத்திற்காகவும் பொக்லைன் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கோத்தகிரி நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட, ஜக்கலோடை பகுதியில், அனுமதி இல்லாமல் மினி பொக்லைன் இயக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தகவலறிந்த வி.ஏ.ஓ., கருப்புசாமி தலைமையிலான வருவாய் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பறிமுதல் செய்தனர். அத்துடன், நிலத்தின் உரிமையாளர் சூர்யா என்பவருக்கு அபராதம் விதிக்க ஏதுவாக, குன்னுார் சப்-கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X