பொது செய்தி

தமிழ்நாடு

முழு கொள்ளளவை எட்டியது ரேலியா அணை

Added : அக் 06, 2021
Share
Advertisement
குன்னுார்;குன்னுார் நகராட்சியின் குடிநீர் ஆதாரமான, ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில், கடந்த, சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால், 43.6 அடி உயரம் கொண்ட, ரேலியா அணை, நேற்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது. முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணையில் இருந்து, நகராட்சியின், 30 வார்டுகளுக்கும், 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்
 முழு கொள்ளளவை எட்டியது ரேலியா அணை

குன்னுார்;குன்னுார் நகராட்சியின் குடிநீர் ஆதாரமான, ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில், கடந்த, சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால், 43.6 அடி உயரம் கொண்ட, ரேலியா அணை, நேற்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது. முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணையில் இருந்து, நகராட்சியின், 30 வார்டுகளுக்கும், 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு, நவ., 22ம் தேதி முழு கொள்ளளவை எட்டியதற்கு பின், தற்போது ஓரிரு நாளில் உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளது. கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு, 14 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட குடிநீர், தற்போது, 3 நாட்களுக்கு ஒரு முறை கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X