பொது செய்தி

தமிழ்நாடு

திடீரென அதிக காய்ச்சலா: டெங்குவாக இருக்கலாம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
இரண்டாம் நாளே பாதிப்பு அதிகமாகும்தற்போது பருவமழை சீசன் என்பதால் டெங்கு வைரஸால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இக்காய்ச்சல் திடீரென வரும். அதிகபட்சமாக 104, 105 டிகிரி என அதிகரிக்கும்.'ஏடிஸ் எஜிப்டே' எனப்படும் நன்னீர் கொசுக்கள் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும். மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கக்கூடாது. மூடப்படாத பாத்திரங்களில் இக்கொசுக்கள்

இரண்டாம் நாளே பாதிப்பு அதிகமாகும்தற்போது பருவமழை சீசன் என்பதால் டெங்கு வைரஸால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இக்காய்ச்சல் திடீரென வரும். அதிகபட்சமாக 104, 105 டிகிரி என அதிகரிக்கும்.

'ஏடிஸ் எஜிப்டே' எனப்படும் நன்னீர் கொசுக்கள் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும். மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கக்கூடாது. மூடப்படாத பாத்திரங்களில் இக்கொசுக்கள் எளிதாக முட்டையிட்டு உற்பத்தி செய்யும். தண்ணீரை தேவையின்றி திறந்த நிலையில் சேமித்து வைக்கக்கூடாது. தேங்காய் மட்டை, சிரட்டை, பாலித்தீன் சீட்களில் மழைநீர் தேங்கினாலே இக்கொசுக்கள் உற்பத்தியாகிவிடும்.

எனவே வீட்டுக்குள்ளும் வெளியேயும் தண்ணீர் தேங்காமல் கவனமாக இருக்க வேண்டும். இந்த கொசுக்கள் காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை மனிதர்களை கடிக்கும். ஒருவரை கடித்த கொசு டெங்கு வைரஸ் உடன் இருந்தால் அது மற்றவர்களை கடிக்கும் போது எளிதில் பரவி விடும். மனிதர்கள் மூலம் நேரடியாக பரவாது.

ஜன்னல்களில் கொசுவலை அமைப்பது அவசியம். டெங்கு வைரஸ் பரவியவுடன் திடீரென காய்ச்சல் 104, 105 டிகிரியைத் தொடும். 2வது, 3வது நாளில் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்து விடும். எலும்பு நொறுங்கி விடும் அளவுக்கு உடல் வலி ஏற்படும். பல்லின் ஈறுப்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படும். மலம் கருப்பாக வெளியேறும்.

தோலில் ஆங்காங்கே சிவப்புப் புள்ளிகளாக தெரியும்.அதிக காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது 40 படுக்கைகளுடன் டெங்கு வார்டு உள்ளது. நான்கு பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.

காய்ச்சல் வந்தவுடன் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். வெள்ளை அணு, தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்தால் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம். தனியார் ஆய்வகங்களில் இந்த பரிசோதனையை எளிதில் செய்யலாம். இதற்கு கட்டணமும் அதிகமில்லை.டெங்கு காய்ச்சல் தான் என்பதை உறுதி செய்வதற்கு ஐ.ஜி.எம். டெங்கு பரிசோதனை செய்ய வேண்டும்.

காய்ச்சல் வந்த 6வது நாளில் தான் ஐ.ஜி.எம்.பாசிடிவ் காண்பிக்கும் என்பதால் தட்டணு,
வெள்ளை அணு ரத்தப் பரிசோதனை முடிவுகளை வைத்தே சிகிச்சையை தொடங்குகிறோம். இது வைரஸ் காய்ச்சல் என்பதால் ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படாது. தட்டணுக்கள் குறைந்தால் மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கியிலிருந்து பெற்று நோயாளிக்கு செலுத்தப்படும்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் இரண்டு வகை காய்ச்சலையும் எளிதாக கண்டறியலாம். கொரோனா தொற்றில் திடீரென காய்ச்சல் அதிகரிக்காது, ரத்தஅணுக்கள், தட்டணுக்கள் குறையாது. மூச்சுதிணறல் தான் ஏற்படும். டெங்கு காய்ச்சலில் மூச்சுதிணறல் ஏற்படாது.எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் நகர்ப்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.

- டாக்டர் எம். நடராஜன்


மருத்துவத்துறைத் தலைவர்


மதுரை அரசு மருத்துவமனை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X