இந்தியா

நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சாரத்துக்கு கட்டுப்பாடா?

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :''நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்சார வினியோகத்தில் கட்டுப்பாடு வராது,'' என, மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு நாடு முழுதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு தேவையான அளவுக்கே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இது குறித்து மத்திய மின் துறை
நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சாரத்துக்கு கட்டுப்பாடா?

புதுடில்லி :''நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்சார வினியோகத்தில் கட்டுப்பாடு வராது,'' என, மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு நாடு முழுதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு தேவையான அளவுக்கே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இது குறித்து மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியதாவது: நிலக்கரியை கையாள்வதில் சில பிரச்னைகள் உள்ளன என்பது உண்மை தான். மழையின் காரணமாக, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நிலக்கரி எடுத்துச் செல்ல முடியவில்லை.


latest tamil news



தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. நிலக்கரியின் தேவை குறித்து துறைச் செயலர் தலைமையிலான சிறப்பு குழு தினமும் கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்தாண்டு இதே நாளில் இருந்த தேவையைவிட தற்போது, 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அதிகம் தேவைப்படுகிறது. இது நல்ல விஷயம்தான். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதையே இது காட்டுகிறது.

நாட்டின் மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரி வாயிலாகவே கிடைக்கிறது. நம்மிடம் போதிய அளவில் நிலக்கரியும் உள்ளது. சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுத்து, மின் உற்பத்திக்கு அனுப்புவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.தற்போதைய நிலையில் மின்சாரத்துக்கு எந்த சிக்கலும் ஏற்படாது. அதனால் வினியோகத்தில் கட்டுப்பாடு தேவையில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிலக்கரி தட்டுப்பாடு நீங்கி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
06-அக்-202108:36:03 IST Report Abuse
duruvasar நஷ்டத்தில் இயங்கினாலும் மக்கள் பணியாக டாஸ்மாக்கை நடத்துவதாக கூறிய நல்லெண்ணம் கொண்ட அணில் பாலாஜி , தமிழர்களை கைவிடமாட்டார். ஒரே தொகுதியிலிருந்து திறமைமிக்க ஒரு எம்எல்ஏ,ஒரு எம்பி என இருவரை பெற்றுள்ளது தமிழர்களின் அதிர்ஷ்டம். இருவரும் இரட்டை குதிரை பூட்டிய வண்டியாக தமிழகத்தை எங்கேயோ இழுத்து கொண்டுபோய் விடுவார்கள். தமிழர்களின் பொற்காலம் ஆரம்பமாகி 4 மாதங்கள் ஆகிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X