சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ., தற்கொலை

Added : அக் 06, 2021
Share
Advertisement
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் காவல் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., கவுதம் 59. இவருக்கு மனைவி, 27 மற்றும் 16 வயதில் இரு மகன்கள் உள்ளனர். அமைச்சர், நீதிபதி போன்றவர்களுக்கு பாதுகாப்பு பிரிவு பணியில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களாக சென்னையில் சிகிச்சை பெற்று வரும் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி
 துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ., தற்கொலை

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் காவல் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., கவுதம் 59. இவருக்கு மனைவி, 27 மற்றும் 16 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
அமைச்சர், நீதிபதி போன்றவர்களுக்கு பாதுகாப்பு பிரிவு பணியில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களாக சென்னையில் சிகிச்சை பெற்று வரும் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை 8:15 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்த கவுதம், தன் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்தார்.

முதற்கட்ட விசாரணைக்கு பின், போலீசார் கூறியதாவது:கவுதமின் இரு மகன்களுக்கும் ரத்தம் உறைதல் சம்பந்தமான நோய் உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக, வருவாயை தாண்டி அதிக கடன் வாங்கியுள்ளார். கடன் பிரச்னை, மகன்களின் சிகிச்சை இதற்கிடையில் பணிக்கு செல்லுதல் போன்றவற்றால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X