குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை இரவில் உருண்ட பாறைகள்: போக்குவரத்து பாதிப்பு; கண்காணிப்பு தீவிரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை இரவில் உருண்ட பாறைகள்: போக்குவரத்து பாதிப்பு; கண்காணிப்பு தீவிரம்

Added : அக் 06, 2021
Share
குன்னுார்:குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், நந்தகோபால் பாலம் அருகே, சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பர்லியார் பகுதிகளில் நேற்று இரவு முதல், கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில், குன்னுார் -மேட்டுப்பாளையம் சாலை, கே.என்.ஆர்., நந்த கோபால் பாலம் அருகே நேற்று இரவு, 8:15 மணிக்கு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.
 குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை இரவில் உருண்ட பாறைகள்: போக்குவரத்து பாதிப்பு; கண்காணிப்பு தீவிரம்

குன்னுார்:குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், நந்தகோபால் பாலம் அருகே, சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பர்லியார் பகுதிகளில் நேற்று இரவு முதல், கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில், குன்னுார் -மேட்டுப்பாளையம் சாலை, கே.என்.ஆர்., நந்த கோபால் பாலம் அருகே நேற்று இரவு, 8:15 மணிக்கு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. அந்த நேரத்தில் அங்கு வாகனங்கள் செல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.தகவலின் பேரில், 'ஹைவே பேட்ரோல்' போலீசார் அங்கு சென்று, 'பேரிகாட்' வைத்து பாதுகாப்பு அறிவிப்புடன் எச்சரிக்கை தடுப்பு அமைத்தனர். பெரிய பாறைகள் என்பதால் உடனடியாக எடுக்க முடியாத சூழல் உள்ளது.ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவில் இடம் இருந்ததால், வாகனங்களை நிறுத்தி, ஒவ்வொன்றாக அனுப்பி வருகின்றனர். மேலும், கன மழை தொடர்வதால், வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க போலீசார் அறிவுரை வழங்கிவருகின்றனர். பாறைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.போலீசார் கூறுகையில்,'கனமழை பெய்து வருவதால், எதுவும் செய்ய முடியாத சூழல் உள்ளது. இரவில் கண்காணிப்பு தொடரும். மேலும் பாறைகள்; மண்சரிவு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகள் குறித்து சிந்திக்கப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X