பொது செய்தி

தமிழ்நாடு

மலை ரயில் கட்டண உயர்வால் காலி பெட்டிகளுடன் செல்லும் அவலம்

Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் - ஊட்டி மலை ரயிலில் முன்பதிவுடன், பல மடங்கு கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதால், தினமும், 15க்கும் குறைவான சுற்றுலா பயணிகள் மட்டும் பயணம் செய்கின்றனர்.நீலகிரி மலை ரயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தி, அனைத்தும் முன்பதிவாக மாற்றப்பட்டது. குன்னுார்- ஊட்டி இடையே முதல் வகுப்புக்கு, 350 ரூபாய், 2ம் வகுப்பு, 150 ரூபாய் எனவும் முன்பதிவுடன் கூடிய கட்டணம்
 மலை ரயில் கட்டண உயர்வால் காலி பெட்டிகளுடன் செல்லும் அவலம்

குன்னுார்:குன்னுார் - ஊட்டி மலை ரயிலில் முன்பதிவுடன், பல மடங்கு கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதால், தினமும், 15க்கும் குறைவான சுற்றுலா பயணிகள் மட்டும் பயணம் செய்கின்றனர்.நீலகிரி மலை ரயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தி, அனைத்தும் முன்பதிவாக மாற்றப்பட்டது. குன்னுார்- ஊட்டி இடையே முதல் வகுப்புக்கு, 350 ரூபாய், 2ம் வகுப்பு, 150 ரூபாய் எனவும் முன்பதிவுடன் கூடிய கட்டணம் வசூலிப்படுகிறது.

அனைத்தும் முன்பதிவு என்பதால், கடைசி நேரத்தில் வருபவர்களுக்கு அபராத தொகை என தனி கட்டணம் நிர்ணயிப்பதால், நடுத்தர சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.இந்த கூடுதல் கட்டணம் செலுத்தி உள்ளூர் மக்கள் செல்ல முடிவதில்லை. இதனால், 250 பயணிகள் பயணம் செய்யும் ரயிலில், 20க்கும் குறைவான சுற்றுலா பயணிகள் மட்டுமே பயணம் செய்கின்றனர்.வார இறுதி நாட்களை தவிர, மற்ற நாட்கள் ரயில் காலியாக செல்கிறது. நேற்று பகல், 12:35 மணிக்கு ஊட்டிக்கு சென்ற மலை ரயிலில், 18 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.மலை ரயில் ஆர்வலர் சுப்ரமணியம் கூறுகையில், ''கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து, உள்ளூர் மக்கள் பயன் பெறும் வகையில் ரயிலை இயக்க, ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-202121:33:06 IST Report Abuse
அப்சாமி காசு இருந்தாத்தான் இந்த ஏழைப்பங்காளர் ராஜ்ஜியத்தில் வாழ முடியும். காசு இல்லேன்னா, நடந்தே போங்க. திருப்பதி மலை ஏறுறீ க்க இல்லே... அதே மாதிரி ரொம்ப சுலபம். பெரியவர் கடுக்காய் வைத்தியம். உடம்புக்கும் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X