பொது செய்தி

தமிழ்நாடு

அக்., 10ல் வடகிழக்கு பருவமழை துவங்கும்! 10 மாவட்டத்தில் சராசரிக்கும் அதிகம் பெய்யும்

Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:வரும் 10ம் தேதி முதல், தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:கடந்த ஜூலை மற்றும் ஆக., மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பூமத்தியரேகை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த
 அக்., 10ல் வடகிழக்கு பருவமழை துவங்கும்! 10 மாவட்டத்தில் சராசரிக்கும் அதிகம் பெய்யும்

கோவை:வரும் 10ம் தேதி முதல், தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:கடந்த ஜூலை மற்றும் ஆக., மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பூமத்தியரேகை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை பயன்படுத்தி, ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட, 'மழை மனிதன்' எனும் கம்ப்யூட்டர் கட்டமைப்பிலிருந்து வட கிழக்கு பருவமழைக்கான முன்னறிவிப்பு பெறப்பட்டது.
அக்., 10ல், வடகிழக்கு பருவமழை துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னை, செங்கல்பட்டு, கடலுார், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளுர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சராசரியை விட அதிகமான மழையளவுஎதிர்பார்க்கப்படுகிறது.அரியலுார், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சி, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருப்பூர், வேலுார், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
06-அக்-202110:50:12 IST Report Abuse
vbs manian என்ன மழை பெய்து என்ன லாபம். ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கடலுக்கு போகும். வழக்கம் போல் வெள்ளம் அபாய அறிக்கை விட்டு விட்டு டீ குடிக்க போய் விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X