காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதற்கட்டமாகவும், வரும் 9ல் இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது.ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளான 12ம் தேதி காலை வரை, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டு போடலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு தபால் ஓட்டு செலுத்த, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு செல்லும் அரசு ஊழியர்களிடம், 'ஆதார்' அட்டை கொடுத்தால்தான், ஓட்டுச்சீட்டு வழங்கப்படும் என, அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியதால், அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.ஆதார் அட்டையை காண்பித்து, ஓட்டுச்சீட்டு பெற வேண்டும் என, எந்த விதிமுறையும் இல்லாத சூழலில், குன்றத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர், 'ஆதார் அட்டையை காண்பித்தால் தான், தபால் ஓட்டுக்கான ஓட்டுச்சீட்டு தருவேன்' எனக் கூறி வருவதால், தற்போது பஞ்சாயத்து நடக்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement