சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்னல் பாய்ந்து மீனவர் பலி நடுக்கடலில் நடந்த துயரம்

Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:நடுக்கடலில் மீன் பிடித்தபோது, மின்னல் பாய்ந்ததில் மீனவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.சென்னை, ராயபுரம், சிங்கார வேலன் நகரைச் சேர்ந்தவர் சுமன் என்ற தேசப்பன், 40; மீனவர். இவர், நேற்று அதிகாலை, பைபர் படகில், கோவிந்தராஜ், 56, தியாகராஜன், 40, தமிழரசன், 30, ஆகியோருடன், கடலில் மீன் பிடிக்க சென்றார். காலை 8:00 மணிக்கு, கரை திரும்பி கொண்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்தது. தேசப்பன்
 மின்னல் பாய்ந்து மீனவர் பலி நடுக்கடலில் நடந்த துயரம்

சென்னை:நடுக்கடலில் மீன் பிடித்தபோது, மின்னல் பாய்ந்ததில் மீனவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

சென்னை, ராயபுரம், சிங்கார வேலன் நகரைச் சேர்ந்தவர் சுமன் என்ற தேசப்பன், 40; மீனவர். இவர், நேற்று அதிகாலை, பைபர் படகில், கோவிந்தராஜ், 56, தியாகராஜன், 40, தமிழரசன், 30, ஆகியோருடன், கடலில் மீன் பிடிக்க சென்றார். காலை 8:00 மணிக்கு, கரை திரும்பி கொண்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்தது.

தேசப்பன் கையில், ஒயர்லெஸ் மற்றும் ஜி.பி.எஸ்., கருவி வைத்திருந்தார்.அப்போது திடீரென மின்னல் பாய்ந்ததில், தேசப்பன், தலை, முதுகு மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், காப்பாற்ற முயற்சித்தும் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.இறந்த தேசப்பனுக்கு, மனைவி பபிதா, மகள் லட்சுமி பிரியா, 14 மற்றும் மகன் அர்ஜுன், 12, உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
12-அக்-202119:09:40 IST Report Abuse
Hari இதனால் மக்கள் மழை பெய்யும்போது செல்போன் அழைப்பை தவிக்கும் மனநிலைக்கு மாறனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X