பொது செய்தி

தமிழ்நாடு

சிவன்மலையில் நெல் வைத்து வழிபாடு

Added : அக் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், முருகப்பெருமான் பக்தர்கள் கனவில் தோன்றி கூறும் பொருட்களை வைத்து பூஜிக்கப் படுவது ஐதீகம்.கடந்த மாதம், 3ம் தேதி முதல் வெள்ளியால் செய்த வில் - அம்பு வைத்து பூஜை நடந்து வந்தது. நேற்று, உத்தரவுப்பெட்டியில், நிறைநாழி நெல் வைக்கப்பட்டு பூஜை துவங்கியது. கொங்கூர்
 சிவன்மலையில் நெல் வைத்து வழிபாடு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், முருகப்பெருமான் பக்தர்கள் கனவில் தோன்றி கூறும் பொருட்களை வைத்து பூஜிக்கப் படுவது ஐதீகம்.கடந்த மாதம், 3ம் தேதி முதல் வெள்ளியால் செய்த வில் - அம்பு வைத்து பூஜை நடந்து வந்தது. நேற்று, உத்தரவுப்பெட்டியில், நிறைநாழி நெல் வைக்கப்பட்டு பூஜை துவங்கியது. கொங்கூர் பகுதி யை சேர்ந்த சிவராம் என்பவர் சார்பில், சுவாமியிடம் உத்தரவு பெற்று நிறைநாழியில் நெல் வைத்து பூஜை நடத்தப்பட்டது.மங்களகரமான நிகழ்வின் போது, சிவன்மலை ஆண்டவர் கோவிலில், நிறைநாழி வைத்து பூஜிக்கப்படுவதால், ஒட்டுமொத்த வேளாண்மையும் செழிக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X