சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணம் செய்வதாக ஏமாற்றியவரை கட்டி வைத்து 'நையப்புடைத்த' பெண்

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை:திருச்சியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதன் வாயிலாக, வில்லிவாக்கம், சாய் நகர் 3வது தெருவைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன், 31, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மொபைல் போன் வாயிலாக பேசி, நெருங்கி பழகி வந்தனர்.இந்நிலையில், அப் பெண்ணை திருமணம் செய்ய கோகுல கிருஷ்ணன் மறுத்ததாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்தவர்,

சென்னை:திருச்சியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதன் வாயிலாக, வில்லிவாக்கம், சாய் நகர் 3வது தெருவைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன், 31, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் மொபைல் போன் வாயிலாக பேசி, நெருங்கி பழகி வந்தனர்.இந்நிலையில், அப் பெண்ணை திருமணம் செய்ய கோகுல கிருஷ்ணன் மறுத்ததாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்தவர், ஜாபர்கான்பேட்டை, முனுசாமி தெருவில் உள்ள நண்பர் வீட்டிற்கு, நேற்று முன்தினம் கோகுல கிருஷ்ணனைவரவழைத்தார்.பின், தன் நண்பர்களான ஜாபர்கான்பேட்டை, முனுசாமி தெருவைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், ராஜ கணேஷ், 30, பவுல்சாமி, 32, ஆகியோருடன் சேர்ந்து, அப்பெண் கோகுல கிருஷ்ணனை கட்டி வைத்து அடித்துள்ளார்.

இதில், ராஜ கணேஷ் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் 'கிராபிக்ஸ் டிசைனராக' பணி புரிகிறார். பின், அப்பெண் தரப்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் நடந்தது குமரன் நகர் காவல் நிலையம் என்பதால், போலீஸ் பாதுகாப்புடன் குமரன் நகர் காவல் நிலையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த கோகுல கிருஷ்ணன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து, கோகுல கிருஷ்ணன் மீதும், இளம்பெண் மற்றும் அவரது நண்பர்கள் மீதும் வழக்கு பதிந்த குமரன் நகர் போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X