73 ஊராட்சிகளுக்கு இன்று தேர்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

73 ஊராட்சிகளுக்கு இன்று தேர்தல்

Added : அக் 06, 2021
Share
உத்திரமேரூர் ஒன்றியத்தில் 73 ஊராட்சிகள் உள்ளன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.தேர்தலையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உத்திரமேரூர் ஒன்றியத்தில் 252 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,593 தேர்தல் அலுவலர்கள் பணிபுரிய

உத்திரமேரூர் ஒன்றியத்தில் 73 ஊராட்சிகள் உள்ளன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உத்திரமேரூர் ஒன்றியத்தில் 252 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,593 தேர்தல் அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.

தேர்தல் பணிக்கு வரும் அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் நேற்று இரவு முதல், இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை ஓட்டுப்பதிவு நிறைவு பெறும் வரை தரமான உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொறுப்பு அந்தந்த ஊராட்சி செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஊராட்சி செயலர்கள் உணவு, குடிநீருக்கான ஏற்பாடுகளை எந்தவிதமான குறையும் இன்றி செய்ய வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X