பூட்டி வைக்கப்பட்டிருந்த சுரங்க நடைபாதை திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டி வைக்கப்பட்டிருந்த சுரங்க நடைபாதை திறப்பு

Added : அக் 06, 2021
Share
அண்ணாசாலை, : அண்ணாசாலையில், நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த சுரங்க நடைபாதை, பாதசாரிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அண்ணாசாலையில், எல்.ஐ.சி., அருகே உள்ள சுரங்கநடைபாதை, மக்கள் பயன்படுத்த முடியாதபடி நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுஇருந்தது. இதனால், அருகே உள்ள கல்லுாரி மாணவியர் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர், சாலை
 பூட்டி வைக்கப்பட்டிருந்த சுரங்க நடைபாதை திறப்பு

அண்ணாசாலை, : அண்ணாசாலையில், நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த சுரங்க நடைபாதை, பாதசாரிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

அண்ணாசாலையில், எல்.ஐ.சி., அருகே உள்ள சுரங்கநடைபாதை, மக்கள் பயன்படுத்த முடியாதபடி நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுஇருந்தது. இதனால், அருகே உள்ள கல்லுாரி மாணவியர் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர், சாலை தடுப்பை ஏறிகுதித்து சாலையை கடக்கும் நிலை நிலவியது. இதனால், விபத்து அபாயம் இருப்பதாகவும், சுரங்க நடைபாதையை திறந்து விட வேண்டும் எனவும், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் அந்த சுரங்க பாதையை திறந்து வைத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X