பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நெருக்கடி

Added : அக் 06, 2021
Share
Advertisement
காவாந்தண்டலம் ஊராட்சியில் 1,800 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு விவசாயிகளே அதிகம். இவர்கள் உற்பத்தி செய்யும் நெல்லை, குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்க வேண்டிய நிலை உள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்தால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.உடல் நலம் சரியில்லை என்றால் காஞ்சிபுரம் அல்லது வாலாஜாபாத் செல்ல வேண்டும். இப்பகுதியில் துணை சுகாதார நிலையம்

காவாந்தண்டலம் ஊராட்சியில் 1,800 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு விவசாயிகளே அதிகம். இவர்கள் உற்பத்தி செய்யும் நெல்லை, குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்க வேண்டிய நிலை உள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்தால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.உடல் நலம் சரியில்லை என்றால் காஞ்சிபுரம் அல்லது வாலாஜாபாத் செல்ல வேண்டும். இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் இருந்தால் வசதியாக இருக்கும். இதை ஏற்படுத்தி தருவதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கு என் ஓட்டு.பி.சிவசங்கரன், 48,காவாந்தண்டலம். அய்யங்கார்குளம் ஊராட்சியில் 2,800 ஓட்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு ஒரு சில நாட்கள் மட்டும் பாலாற்று குடிநீர் வழங்கப்படுகிறது.

மற்றப்படி ஆழ்துளை கிணற்று தண்ணீர் தான். முறையான பாலாற்று தண்ணீர் வினியோகிக்க வேண்டும். ஊர் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சோலார் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தெருச்சாலைகளை புதுப்பிக்க வேண்டும். ஊர்ப்புற நுாலகம் அமைப்பதாக நம்பிக்கை அளிப்பவருக்கு என் ஓட்டு நிச்சயம்.டி.பாபு, 32, அய்யங்கார்குளம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X