பலாத்காரம் நடந்த 9ம் நாளில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒன்பதாவது நாளில், குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.ராஜஸ்தானில் முதல்வர் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கடந்த 26ம் தேதி இரவு, 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.வழக்கு

ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒன்பதாவது நாளில், குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கடந்த 26ம் தேதி இரவு, 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.வழக்கு பதிவு செய்த போலீசார் அடுத்த நாள் கமலேஷ் மீனா, 25, என்பவரை கைது செய்தனர். குற்றத்தின் தன்மை கருதி தீவிரமாக செயல்பட்ட போலீசார், இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தயார் செய்தனர்.

வழக்கு பதிவு செய்த 18 மணி நேரத்தில் 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்றமும் வழக்கு விசாரணையை உடனடியாகத் துவங்கியது. ஆதாரங்கள் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்றம் செயல்பட்ட ஐந்து நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறுமியை பலாத்காரம் செய்த கமலேஷ் மீனாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட ஒன்பது நாட்களில் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது, பல்வேறு தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X