நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் பலி; கிராமத்தினர் சோகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் பலி; கிராமத்தினர் சோகம்

Added : அக் 06, 2021
Share
காசிமேடு : நடுக்கடலில் மீன் பிடித்த போது மின்னல் பாய்ந்ததில் மீனவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் கடலோர கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியது.சென்னை, ராயபுரம், சிங்கார வேலன் நகரைச் சேர்ந்தவர் சுமன் என்ற தேசப்பன், 40; மீனவர்.இவர், நேற்று அதிகாலை, தனக்கு சொந்தமான பைபர் படகில், கோவிந்தராஜ், 56, தியாகராஜன், 40, தமிழரசன், 30, ஆகியோருடன், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்

காசிமேடு : நடுக்கடலில் மீன் பிடித்த போது மின்னல் பாய்ந்ததில் மீனவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் கடலோர கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை, ராயபுரம், சிங்கார வேலன் நகரைச் சேர்ந்தவர் சுமன் என்ற தேசப்பன், 40; மீனவர்.இவர், நேற்று அதிகாலை, தனக்கு சொந்தமான பைபர் படகில், கோவிந்தராஜ், 56, தியாகராஜன், 40, தமிழரசன், 30, ஆகியோருடன், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்றார்.கடலில் 21 நாட்டிக்கல் மைல் துாரத்தில் சென்று மீன்பிடித்து, காலை 8:00 மணிக்கு, கரை திரும்பி கொண்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்தது.

தேசப்பன் கையில், ஒயர்லெஸ் மற்றும் ஜி.பி.எஸ்., கருவி வைத்திருந்தார்.அப்போது திடீரென மின்னல் பாய்ந்ததில், தேசப்பன், தலை, முதுகு மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அதிர்ச்சிஅடைந்த சக மீனவர்கள், காப்பாற்ற முயற்சித்தும் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவரது உடல் படகு மூலம், கரைக்கு கொண்டு வரப்பட்டது.

இச்சம்பவம் கடலோர கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியது.தகவலறிந்து வந்த ஆர்.கே., நகர் எம்.எல்.ஏ., எபினேசர், இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினார். மீன்வளத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.மேலும், மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம், முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, அந்த குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய உதவிகள் பெற ஏற்பாடு செய்வதாக, எம்.எல்.ஏ., தெரிவித்தார்.இறந்த தேசப்பனுக்கு, மனைவி பபிதா, மகள் லட்சுமி பிரியா, 14 மற்றும் அர்ஜுன், 12, என்ற மகனும் உள்ளனர்.காசிமேடு மீன்பிடித் துறைமுகம் போலீசார், தேசப்பனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X