பொது செய்தி

தமிழ்நாடு

வடலுாரில் வள்ளலாரின் 199வது அவதார தின விழா

Added : அக் 06, 2021
Share
Advertisement
வடலுார்:வடலுாரில் வள்ளலாரின் 199வது அவதார தின விழா நடந்தது.கடலுார் மாவட்டம், வடலுார் அருகே உள்ள மருதுார் கிராமத்தில் 5.10.1823 அன்று ராமலிங்க அடிகளார் பிறந்தார். அவர், சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கி, வடலுாரில் சத்திய ஞான சபை, தரும சாலையை தொடங்கினார். வள்ளலாரின் 199 வது அவதார தின விழா வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தில் கொண்டாடப்பட்டது. காலை 5 மணி அளவில் அகவல் பாராயணம்
 வடலுாரில் வள்ளலாரின்  199வது அவதார தின விழா

வடலுார்:வடலுாரில் வள்ளலாரின் 199வது அவதார தின விழா நடந்தது.

கடலுார் மாவட்டம், வடலுார் அருகே உள்ள மருதுார் கிராமத்தில் 5.10.1823 அன்று ராமலிங்க அடிகளார் பிறந்தார். அவர், சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கி, வடலுாரில் சத்திய ஞான சபை, தரும சாலையை தொடங்கினார். வள்ளலாரின் 199 வது அவதார தின விழா வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

காலை 5 மணி அளவில் அகவல் பாராயணம் நடந்தது. பின், காலை 6:30 மணியளவில் தரும சாலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. வள்ளலார் அவதரித்த மருதுார் கிராமத்திலும் சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டது. இரு இடங்களிலும் சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தெய்வ நிலைய செயல் அலுவலர்(பொ) ராஜா சரவணக்குமார் செய்திருந்தார். சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X