உயிருடன் புலியை பிடிக்க முயற்சி: ஐகோர்ட்டில் அரசு பிளீடர் தகவல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உயிருடன் புலியை பிடிக்க முயற்சி: ஐகோர்ட்டில் அரசு பிளீடர் தகவல்

Added : அக் 06, 2021
Share
சென்னை:நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் உலவும் புலியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்வதாகவும் கொல்லும் திட்டம் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கால்நடைகளுக்கான நல அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா தாக்கல் செய்த மனு: கூடலுார் பகுதியில் உலவும் புலி கால்நடைகளை கொன்றிருப்பதாகவும் சந்திரன் என்பவர் பலியாகி இருப்பதாகவும்

சென்னை:நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் உலவும் புலியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்வதாகவும் கொல்லும் திட்டம் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கால்நடைகளுக்கான நல அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா தாக்கல் செய்த மனு: கூடலுார் பகுதியில் உலவும் புலி கால்நடைகளை கொன்றிருப்பதாகவும் சந்திரன் என்பவர் பலியாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. புலியை வேட்டையாட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிருடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் யோகேஸ்வரன் வாதாடினார்.அரசு பிளீடர் முத்துக்குமார் ''புலியை உயிருடன் பிடிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. கொல்லும் திட்டம் இல்லை'' என்றார்.

முதல் பெஞ்ச் 'புலியை கொல்ல வேண்டாம். அது ஆள்கொல்லியாக இல்லாமல் கூட இருக்கலாம். அதனால் உடனடியாக கொல்ல முயற்சிக்க வேண்டாம்' என்று கூறியுள்ளது. விசாரணையை இரண்டு வாரங்களுக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X