தமிழ்நாடு

வேட்பாளர்களால் வாக்காளர் வீடுகளில் குவியுது பணம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
திருப்போரூர் ஒன்றியம், சென்னையை ஒட்டி பகுதி என்பதால், வருவாய் கொழிக்கும். இதனால் இந்த ஒன்றியத்தில் இரு மாவட்ட கவுன்சிலர், 22 ஒன்றிய கவுன்சிலர், 50 ஊராட்சி தலைவர், 381 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுவதாக, வெள்ளையிடம் தெரிவித்தார்கருப்பு.குறிப்பாக 'ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்தை வித்தாவது பதவியை பிடிக்க பேயாக
வேட்பாளர்களால் வாக்காளர் வீடுகளில் குவியுது பணம்

திருப்போரூர் ஒன்றியம், சென்னையை ஒட்டி பகுதி என்பதால், வருவாய் கொழிக்கும். இதனால் இந்த ஒன்றியத்தில் இரு மாவட்ட கவுன்சிலர், 22 ஒன்றிய கவுன்சிலர், 50 ஊராட்சி தலைவர், 381 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுவதாக, வெள்ளையிடம் தெரிவித்தார்

கருப்பு.
குறிப்பாக 'ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்தை வித்தாவது பதவியை பிடிக்க பேயாக அலையுறாங்க' எனவும் கூறினார்.எனக்கு தெரியும் கருப்பு என, பேச்சை வளர்த்த வெள்ளை 'வளர்ச்சியில்லாத ஊராட்சியில ஓட்டுக்கு 500 முதல் 1,000 ரூபாய் தர்றாங்க... வருவாய் அதிகம் கிடைக்குற சென்னையை ஒட்டிய ஊராட்சிகள்ல ஓட்டுக்கு அல்லது குடும்பத்திற்கு 1,000 முதல் 5,000 ரூபாய் தர்றாங்க. அல்லது 1 கிராம் தங்க காசு கொடுக்க இருக்காங்களாம்' என்றார்.

மேலும் 'ஊராட்சிகள்ல ஒரு மகளிர் குழுக்களுக்கு பணம் இல்லாத 1 லட்சம் ரூபாய் காசோலையை தந்துட்டு, ஜெயிச்சதும் காசோலைக்கான பணம் செலுத்துறோம் என, வாய்வழியாக சத்தியம் செய்கின்றனராம்' என்றவரை, கருப்பு மறித்தார்.பின் 'அது பரவால்லப்பா... வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுறவங்க கூட ஓட்டுக்கு 500 அல்லது புடவை, குக்கர், மிக்சி, காமாட்சி விளக்கு உள்ளிட்ட பொருட்களை தர்றாங்க' என்றவர்,

'ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் ஒரு குடும்பத்திற்கு அல்லது ஒரு குடும்பத்தில் எத்தனை பெண்கள் உள்ளனரோ அவர்களுக்கு பட்டுப்புடவை கொடுக்குறாங்க' என மேலும் பல உள்ளூர் அரசியல் தகவலை கூறினார்.அதற்கு, 'இதெல்லாம் தவிர சிலர் குறிப்பிட்ட ஓட்டுகளை வாங்கி தர, பெரும் தொகையை கைப்பற்றியுள்ளனர்' என கருப்பு முடித்து, வீட்டில் இருந்த ஓட்டுச்சீட்டை தேட சென்றார்.

வெள்ளை, 'எப்படியிருந்தாலும் வாக்காளர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனா பணம், பொருள் வாங்கிட்டு, வாங்கியதை வெளியில் சொல்லாமல் இந்த விஷயத்தில் மட்டும் எல்லாரும் ஒற்றுமையாக இருக்காங்க...' என அவரும் பேச்சை முடித்து ஓட்டளிக்க கிளம்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X