தமிழ்நாடு

வரதர் கோவிலில் நவராத்திரி தினமும் ஊஞ்சல் சேவை

Added : அக் 06, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று துவங்கிய நவராத்திரி விழாவில் பெருமாள், உபநாச்சியார், பெருந்தேவி தாயார், 100 கால் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.இந்த விழா, நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு,
 வரதர் கோவிலில் நவராத்திரி தினமும் ஊஞ்சல் சேவை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று துவங்கிய நவராத்திரி விழாவில் பெருமாள், உபநாச்சியார், பெருந்தேவி தாயார், 100 கால் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.இந்த விழா, நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருந்தேவி தாயாருடன் கோவிலில் உள்ள 100 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.நவராத்திரி விழா முடியும் வரை, தினசரி மாலை ஊஞ்சல் சேவை நடைபெறும். பெருந்தேவி தாயாருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.வரும், 14ம் தேதி நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.

இந்த 10 நாட்கள் மட்டும், பெருமாளும் பெருந்தேவி தாயாரும், கண்ணாடி அறையில் அருள்பாலிப்பர். இதற்காக 10 லட்சம் ரூபாயில் பக்தர்களின் நன்கொடையில் கண்ணாடி அறை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.வரும் 15ல் சரஸ்வதி பூஜை நாளன்று மாலையில் பெருந்தேவி தாயார், சன்னிதி எதிரில் உள்ள மகா நவமி மண்டபத்தில் அபிஷேகம் ஆராதனை முடிந்ததும், பெருமாள், உப நாச்சியார், பெருந்தேவி தாயார் ஆகியோர் வெண்பட்டு உடுத்தி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X