பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிட்ட படி விண்கல்லுக்கு விண்கலம் அனுப்ப திட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரபஞ்சம் குறித்து ஆய்வு செய்வதற்காக விண்கலம் ஒன்றை விண்கல்லுக்கு அனுப்ப திட்டமிட்டுள் ளது.மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு செய்ய, 'ஹோப்' என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி கழக தலைவர் சாரா அல் - அமிரி கூறியதாவது:வரும்

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரபஞ்சம் குறித்து ஆய்வு செய்வதற்காக விண்கலம் ஒன்றை விண்கல்லுக்கு அனுப்ப திட்டமிட்டுள் ளது.

மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு செய்ய, 'ஹோப்' என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி கழக தலைவர் சாரா அல் - அமிரி கூறியதாவது:வரும் 2028ல் செவ்வாய் கிரகம் மற்றும் புதன் கிரகத்திற்கு இடையில் உள்ள விண்கல்லுக்கு விண்கலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.இந்த விண்கலம் ஐந்து ஆண்டுகளில் 360 கோடி கி.மீ., பயணித்து, 2033ல் விண்கல்லில் இறங்கும். அங்கிருந்து பிரபஞ்சம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இந்த திட்டம் அமெரிக்காவின் கொலராடோ பல்கலை உடன் இணைந்து செயல்படுத்தப்படும். இது, மிகக் கடினமான, சவாலான திட்டம்.இவ்வாறு அவர் கூறினார்.விண்வெளியில் 11 லட்சத்திற்கும் அதிகமான விண்கற்கள் சுற்றி வருவதாக 'நாசா' கணக்கிட்டுள்ளது. அவற்றில் ஒரு விண்கல்லில் விண்கலத்தை இறக்கும் திட்டம் வெற்றி பெற்றால், ஐரோப்பிய கூட்டமைப்பு, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X