பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவதற்கு தடை

Added : அக் 06, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று ஒன்றியங்களில், முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது.தேர்தல் நடைபெறும் பகுதியில், வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது உள்ளிட்ட வேலைகளுக்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.வேட்பாளர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்யக்கூடாத செயல்கள் குறித்து,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று ஒன்றியங்களில், முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறும் பகுதியில், வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது உள்ளிட்ட வேலைகளுக்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.வேட்பாளர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்யக்கூடாத செயல்கள் குறித்து, தேர்தல் ஆணையம் சிலவற்றை கூறியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும், இன்றும், இரண்டாம் கட்டமாக நடைபெறும் 9ம் தேதியும், ஓட்டுச்சாவடிக்குள்ளும், அங்கிருந்து, 100 மீ., தொலைவுக்குள்ளும் ஓட்டு சேகரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது ஓட்டு சேகரிப்பின்போது, வாக்காளர்களை நிர்ப்பந்தம் செய்தல், அச்சுறுத்தல், மிரட்டுதல், ஓட்டுச்சாவடிக்குள் செல்வதை தடுத்தல் போன்ற செயலில் ஈடுபட கூடாது.

ஓட்டுச்சாவடியிலிருந்து 200 மீ., தொலைவுக்குள், தேர்தல் அலுவலகம் இருக்கக்கூடாது எந்தவித அறிவிப்பையும் அச்சடித்தும், கையால் எழுதியும் வினியோகிக்க அனுமதியில்லை ஒலிபெருக்கி வைத்து ஓட்டுச்சாவடி பகுதியில் ஓசை எழுப்புதல், கூச்சல், குழப்பம் விளைவித்தல், தகாத நடவடிக்கையில் ஈடுபடுதல் கூடாது ஓட்டுப்பதிவு நாளில், வாக்காளர்களுக்கு உணவு அளித்தல், மது, போதைப்பொருட்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X