பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கு மனநல பிரச்னை தீர்வு காண அமைச்சர் யோசனை

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுடில்லி:''குழந்தைகளை நண்பர்களாக கருதி அவர்களுடன் பெற்றோர் சகஜமாக பேச வேண்டும். அப்போது தான் குழந்தைகளுக்கு மன நலம் தொடர்பான எந்த பிரச்னையும் ஏற்படாது'' என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.ஐ.நா. சர்வதேச குழந்தைகள்நிதியம் ௨௦௨௧ம் ஆண்டில் உலகம் முழுதும் குழந்தைகளின் நிலை பற்றி புத்தகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை வெளியிட்டு

புதுடில்லி:''குழந்தைகளை நண்பர்களாக கருதி அவர்களுடன் பெற்றோர் சகஜமாக பேச வேண்டும். அப்போது தான் குழந்தைகளுக்கு மன நலம் தொடர்பான எந்த பிரச்னையும் ஏற்படாது'' என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

ஐ.நா. சர்வதேச குழந்தைகள்நிதியம் ௨௦௨௧ம் ஆண்டில் உலகம் முழுதும் குழந்தைகளின் நிலை பற்றி புத்தகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை வெளியிட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:தங்களுடன் குழந்தைகள் சுதந்திரமாகவும் சகஜமாகவும் பேசுவதை குடும்பத்தினர் ஊக்குவிக்க வேண்டும்.

இப்போதுள்ள காலத்தில் குழந்தைகளும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களும் பேசிக் கொள்வதே இல்லை. சிறிய குடும்பமாகி விட்டதால் வீடுகளில் குழந்தைகள் பெரும்பாலும் தனிமையில் உள்ளனர்.குழந்தைகளை பெற்றோர் தங்கள் நண்பர்களாக கருதி அவர்களுடன் சகஜமாக பேச வேண்டும்.

வாரத்தில் ஒரு நாளாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாட வேண்டும்.அப்போது தான் குழந்தைகளுக்கு மனதளவில் ஏற்படும் பிரச்னைகளை கண்டு பிடித்து தீர்வு காண முடியும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் பெற்றோருக்கு அடுத்தபடியாக இருப்பது ஆசிரியர்கள் தான். குழந்தைகளிடம் ஆசிரியர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

ஆசிரியர் பயிற்சியில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனப் பிரச்னைகளை கண்டுபிடிப்பதற்கான பயிற்சியும் இடம் பெற வேண்டும். அப்போது தான் மன நல பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து செல்ல பெற்றோரிடம் ஆசிரியர்களால் பரிந்துரைக்க முடியும்.

உலகில் 14 சதவீத குழந்தைகள் மனப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லாவிடில் எதிர் காலத்தில் சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X