மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
கோல்கட்டா:இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட மூன்று பேர் எம்.எல்.ஏ.க்களாகநாளை பதவியேற்கின்றனர்.மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக இருந்த மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதே போல் திரிணமுல் காங்.கை சேர்ந்த ஜாகிர் உசேன் மற்றும் அமிருல் இஸ்லாம்

கோல்கட்டா:இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட மூன்று பேர் எம்.எல்.ஏ.க்களாகநாளை பதவியேற்கின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக இருந்த மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதே போல் திரிணமுல் காங்.கை சேர்ந்த ஜாகிர் உசேன் மற்றும் அமிருல் இஸ்லாம் ஆகியோர் மற்ற இரண்டு தொகுதிகளில் வென்றனர்.

மம்தா உட்பட மூவரும்நாளை காலை 11:45 மணிக்கு எம்.எல்.ஏ.வாக பதவியேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் ஜகதீப் தன்கருக்குஅழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X