தமிழ்நாடு

முதற்கட்டமாக 1,744 ஓட்டுச்சாவடிகளில் இன்று... ஓட்டுப்பதிவு! பாதுகாப்பு பணியில் 4,250 போலீசார் ஈடுபாடு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் ஆர்வம்-

Added : அக் 06, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 1,744 ஓட்டுச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதன் பாதுகாப்பு பணியில் 4,250 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க, மக்கள் மிகவும் ஆர்வம் அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த மாதம் 13ம் தேதி
முதற்கட்டமாக 1,744 ஓட்டுச்சாவடிகளில் இன்று... ஓட்டுப்பதிவு!    பாதுகாப்பு பணியில் 4,250 போலீசார் ஈடுபாடு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் ஆர்வம்-

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 1,744 ஓட்டுச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதன் பாதுகாப்பு பணியில் 4,250 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க, மக்கள் மிகவும் ஆர்வம் அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த மாதம் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 15ல் இருந்து 22 வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கூர்ந்தாய்வு முடிந்து 25ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.ஒரு வாரத்திற்கும் மேலாக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முழுக்க முழுக்க கிராமப்புறங்களில் மட்டுமே தேர்தல் நடைபெறுவதால், வேட்பாளர்கள் கிராமம் கிராமமாக சென்று ஓட்டு சேகரித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை முதற்கட்டமாக காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய மூன்று ஒன்றியங்களில், 680 ஓட்டுச்சாடிகளில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

பதற்றமான 255 ஓட்டுச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், புனிததோமையார்மலை ஆகிய ஒன்றியங்களுக்கு, இன்று தேர்தல் நடக்கிறது. இங்குள்ள 1,064 ஓட்டுச்சாவடிகளுக்கு, 6,384 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 1.05 லட்சம் வாக்காளர்கள், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 1.05 லட்சம் வாக்காளர்கள், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 1.04 லட்சம் வாக்காளர்கள், இன்று ஓட்டளிக்க உள்ளனர்.

இவர்களுக்காக 680 ஓட்டுச்சாவடிகளில், 5,053 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.72 பொருட்கள்காஞ்சிபுரம் மாவட்டத்தை 89 மண்டலங்களாக பிரித்து, மண்டல அலுவலர்கள் மூலம், ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்கள் 91 வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் அழியாத மை, கயிறு, சட்ட குறிப்புகள் அடங்கிய புத்தகம், மெழுகு, அரக்கு, படிவம் என 72 வகையான பொருட்கள் நேற்றே அனுப்பப்பட்டன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் வாங்க, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், தலா இரண்டு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 13 ஒன்றியங்களுக்கும், டி.ஆர்.ஓ., நிலையில், தேர்தல் வட்டார மேற்பார்வையாளர்களாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தேர்தல் சம்பந்தமாக, அந்தந்த ஒன்றியங்களில் இவர்கள் மேற்பார்வையிடுவர்.2ம் கட்ட தேர்தல் நடக்கும் இடங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய ஒன்றியங்கள்; செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், காட்டாங்கொளத்துார் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக வரும் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த ஒன்றியங்களில், நாளை வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம்.100 நாள் பணியாளர்கள் ஏமாற்றம்தேர்தல் நடக்கும் பகுதிகளில் உள்ள பணியாளர்கள், சிறு நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகளுக்கு தேர்தலன்று விடுப்பு அளித்து, ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.ஆனால் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் கிராமப்புற பணியாளர்களுக்கு, இன்று விடுப்பு வழங்க வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஊதியம் வழங்கப்படாது எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்பட்டது.

ஆனால், இம்முறை அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.'மொபைல் டீம்' வைத்து ரோந்துதேர்தலுக்கான பாதுகாப்பு பணியில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஏழு துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 ஆய்வாளர்களும், 2,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.தவிர 53 'மொபைல் டீம்'மாக போலீசார் ரோந்து பணியில் இருப்பர். 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தலன்று சோதனைச்சாவடிகள் செயல்படும்.

குறிப்பாக, 35 பேர் உடைய அதிரடிப்படையினர், தேர்தலன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.செங்கல்பட்டு போலீஸ் மாவட்டத்தில், எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் மாவட்ட போலீசார் 1,000 பேரும், வெளிமாவட்ட போலீசார் 1,250 பேரும் என 2,250 போலீசார், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்திற்கும் தலா ஒரு போலீசாரும், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், ஒரு சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில், நான்கு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வசதிகள்ஏற்பாடுஓட்டுச் சாவடிகளில் மின் வெட்டு ஏற்படாமல் இருக்க, மின் வாரியத்திடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஓட்டுச்சாவடியில் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டு உள்ளது.மாற்றுத்திறனாளிகள் செல்ல சாய்தள வசதி அமைக்கப்பட்டு உள்ளது. சில ஓட்டுச்சாவடிகளில் 'வீல் சேர்' வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது.
-நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X