சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எக்ஸ்ரே பதிவை காகிதத்தில் அச்சிடும் அவலம் அரசு மாவட்ட மருத்துவமனையில் இந்த கூத்து

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை:கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், கதிர்வீச்சு பரிசோதனைக்கான உள்ளீட்டு படத்தை, 'எக்ஸ்ரே பிலிம்' வடிவில் வழங்காமல், காகிதத்தில் அச்சிட்டு நோயாளிக்கு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எக்ஸ்ரே எடுக்க பணம் கட்டாதோருக்கு இவ்வாறு வழங்கப்படுவதாக, மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.அரசு மருத்துவமனைகளில், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

சென்னை:கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், கதிர்வீச்சு பரிசோதனைக்கான உள்ளீட்டு படத்தை, 'எக்ஸ்ரே பிலிம்' வடிவில் வழங்காமல், காகிதத்தில் அச்சிட்டு நோயாளிக்கு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எக்ஸ்ரே எடுக்க பணம் கட்டாதோருக்கு இவ்வாறு வழங்கப்படுவதாக, மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை நோயாளிகள் மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு பிலிம் வடிவில் உள்ளீட்டு படம் வழங்கப் படுகிறது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், பிலிம் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு பரிசோதனை படங்கள், காகிதத்தில் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, மருத்துவ சேவைகள் இயக்க அதிகாரிகள் கூறியதாவது:

கதிர்வீச்சு பரிசோதனைகளை பொறுத்தவரை, கட்டணம் செலுத்துவோருக்கு, பிலிம் வழங்கப்படுகிறது. இலவசமாக பரிசோதனை செய்பவர்களுக்கு, பரிசோதனை முடிவுகள் காகிதத்தில் அச்சிட்டு வழங்கப்படுகின்றன.குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் போது, கதிர்வீச்சு பரிசோதனையை, டாக்டர்கள் கணினியில் பார்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.

நோயாளிகள் கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு, இலவசமாக பிலிம்கள் வழங்கப்படுகின்றன. சில நேரங்களில் அவை காகிதத்தில் அச்சிடப்பட்டு, நோயாளிகளின் விபரங்கள் அடங்கிய கோப்பில் இணைக்கப்படுகின்றன.பொதுவாகவே, காகிதத்தில் அச்சிடப்பட்டாலும், பிலிமில் நகலெடுத்தாலும், அதன் முடிவுகள் மாறப்போவதில்லை. சிகிச்சைகளின் தரத்திலும், டாக்டர்களின் கலந்தாலோசனையிலும் எந்த மாற்றமும் ஏற்படாது.

கோவில்பட்டி விவகாரத்தை பொறுத்தவரை, பிலிம் பற்றாக்குறை ஏதும் இல்லை. மாறாக, தேவையின்றி அவற்றை பயன்படுத்த வேண்டாம் எனக் கருதியே, காகிதத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது.அதன்பின், நோயாளிகள் கேட்டதால், அவர்களுக்கு பிலிம் வழங்கப்பட்டது. இதுபோன்ற சர்ச்சைகள் இனி எழாத வண்ணம் செயல்படுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X