சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' ஊழியர் குத்திக்கொலை

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் பலியானார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடத்தில் அரசு 'டாஸ்மாக்' கடை உள்ளது. இங்கு வாரணவாசியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி துளசிதாஸ் 45; நத்தநல்லுார் கிராமத்தை சேர்ந்த ராமு 42 ஆகியோர் பணியாற்றி வந்தனர்.நேற்று முன்தினம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் பலியானார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடத்தில் அரசு 'டாஸ்மாக்' கடை உள்ளது. இங்கு வாரணவாசியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி துளசிதாஸ் 45; நத்தநல்லுார் கிராமத்தை சேர்ந்த ராமு 42 ஆகியோர் பணியாற்றி வந்தனர்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் கடையில் வசூலான பணத்தை எண்ணி கடையில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி இருவரும் வெளியே சென்றனர்.

சில அடி துாரம் நடந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் துளசிதாஸை தாக்கி கூர்மையான ஆயுதத்தால் அவரை குத்தியுள்ளனர். தடுக்க சென்ற ராமுவையும் குத்தினர். ராமு அங்கிருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடினார்; துளசிதாஸ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே இறந்தார்.

துளசிதாஸ் கொலை செய்யப்பட்டதையடுத்தை கண்டித்து ஸ்ரீபெரும்புதுார் காஞ்சிபுரம் திருத்தணி உள்ளிட்ட பல இடங்களில் 'டாஸ்மாக்' ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X