பொது செய்தி

தமிழ்நாடு

'பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்'

Added : அக் 06, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : ''பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்,'' என, கண்காணிப்பு சிறப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.சென்னை மாநகராட்சி, மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க, 15 மண்டலங்களுக்கும், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்திற்கு, கமல் கிஷோர் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.அவர், நேற்று முன்தினம், மழை பாதிப்புகளை
 'பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்'


திருவொற்றியூர் : ''பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்,'' என, கண்காணிப்பு சிறப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.

சென்னை மாநகராட்சி, மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க, 15 மண்டலங்களுக்கும், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்திற்கு, கமல் கிஷோர் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.அவர், நேற்று முன்தினம், மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என, மண்டலம் முழுதும் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில், பகிங்ஹாம் கால்வாய் பயணிக்கும், திருவொற்றியூர் குப்பை மேடு, கார்கில் நகர் மோட்டார் அறை, சடையங்குப்பம் மேம்பாலம் மற்றும் முகத்துவாரம் போன்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, மழை நீர் வெளியேற தேவையான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மண்டல அலுவலகத்தில் நேற்று காலை அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்ற, ஆய்வு கூட்டம் நடந்தது.இதில், மண்டல உதவி கமிஷனர் பால்தங்கதுரை உட்பட மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை, நெடுஞ்சாலை, குடிநீர் வழங்கல் வாரியம், மழைநீர் வடிகால் வாரியம், ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.திருவொற்றியூரில், மழை நீர் தேங்கும், 21 சாதாரண இடங்கள்; 11 தொடர் பிரச்னையுள்ள இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.மழை நீர் தேங்கினால், உடனடியாக வெளியேற்ற, 31 மின் மோட்டர்கள், மரங்கள் விழுந்தால் அகற்ற, எட்டு மரம் அறுக்கும் இயந்திரங்களும் உள்ளன.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுவோரை மீட்டு, அடைக்கலம் கொடுக்க 14 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

முகாம் ஒன்றிற்கு, சுகாதார ஆய்வாளர், உதவி பொறியாளர் மற்றும் உதவி வருவாய் அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X