பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய் மீது தற்காலிக பாலம் விபத்து அபாயத்தில் பாதசாரிகள்

Added : அக் 06, 2021
Share
Advertisement
அம்பத்துார் : மழை நீர் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக சிறு பாலத்தை பயன்படுத்துவோர் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.சென்னை அம்பத்துார், கருக்கு பிரதான சாலை - -ஞானமூர்த்தி நகர் சந்திப்பு அருகே, பட்டரவாக்கம் ரயில் நிலையத்தையொட்டி, 60 அடி அகலம், 8 அடி ஆழம் உடைய, பிரதான மழை நீர் கால்வாய் உள்ளது. அம்பத்துார் ஏரி உபரி நீர் மற்றும் சுற்றுவட்டாரங் களில்
 கால்வாய் மீது தற்காலிக பாலம்   விபத்து அபாயத்தில் பாதசாரிகள்


அம்பத்துார் : மழை நீர் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக சிறு பாலத்தை பயன்படுத்துவோர் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

சென்னை அம்பத்துார், கருக்கு பிரதான சாலை - -ஞானமூர்த்தி நகர் சந்திப்பு அருகே, பட்டரவாக்கம் ரயில் நிலையத்தையொட்டி, 60 அடி அகலம், 8 அடி ஆழம் உடைய, பிரதான மழை நீர் கால்வாய் உள்ளது. அம்பத்துார் ஏரி உபரி நீர் மற்றும் சுற்றுவட்டாரங் களில் கிடைக்கும் மழைநீர், அந்த கால்வாய் மூலம் கொரட்டூர் ஏரிக்கும் பாயும்.

மரப்பலகை

பராமரிப்பற்ற அந்த கால்வாயில், ஆகாயத் தாமரை மற்றும் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன.இந்த நிலையில், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதில் துார் வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர்.அதற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக, கால்வாயின் மீது, 4 அடி உயரத்தில், 1 அடி அகலத்தில் மரப்பலகை மூலம், தற்காலிக சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பட்டரவாக்கம், அம்பத்துார் தொழிற்பேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், அங்குள்ள கருக்கு, ஞானமூர்த்தி நகர், புதுார், கள்ளிக்குப்பம் பகுதிகளுக்கும், பட்டரவாக்கம் ரயில் நிலையத்திற்கும் சென்று வர, குறுக்கு பாதையாக, அந்த தற்காலிக பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.அவர்கள், ரயில் நிலையத்திற்கு, 1.5 கி.மீ., சுற்றுப்பாதையில் செல்வதை தவிர்க்க, இந்த, கரடு முரடான குறுக்கு வழியை பயன்படுத்துகின்றனர்.

பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மாணவ - மாணவியர் என அனைத்து தரப்பினரும், ஆபத்தான வகையில், அந்த தற்காலிக பாலத்தின் பயணிக்கின்றனர். வழிப்பறிஅவர்கள், நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மாலை நேரத்தில், அங்கு வெளிச்சமில்லாத நிலையில், மது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானோர் அங்கு கூடுவதால், வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் நடக்கின்றன.

பிரச்னைக்கு தீர்வு காண, அங்குள்ள தொழிற்சாலைகளின் மூலம், அகலமான நடைமேடையுடன், இரும்பு பாலம் மற்றும் விளக்கு வசதி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்காலிக பாலத்தை அகற்ற வேண்டும்.அதில், அலட்சியம் காட்டினால், அசம்பாவிதம் நடக்கும் என, சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X