பொது செய்தி

தமிழ்நாடு

தரமணி - வேளச்சேரி இணைப்பு சாலை மாநகராட்சி வசம் ஒப்படைப்பது எப்போது?

Added : அக் 06, 2021
Share
Advertisement
தெற்கு ரயில்வே சார்பில் மேற்கொள்ளப்படும், தரமணி - வேளச்சேரி இணைப்பு சாலை பணிகளை விரைந்து முடித்து, அந்த சாலை பராமரிப்பை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.இதன் மூலம் வேளச்சேரி பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் என, சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பல கோடி ரூபாய்தரமணி, எம்.ஜி.ஆர்., சாலையில்
 தரமணி  - வேளச்சேரி இணைப்பு சாலை மாநகராட்சி வசம் ஒப்படைப்பது எப்போது?

தெற்கு ரயில்வே சார்பில் மேற்கொள்ளப்படும், தரமணி - வேளச்சேரி இணைப்பு சாலை பணிகளை விரைந்து முடித்து, அந்த சாலை பராமரிப்பை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

இதன் மூலம் வேளச்சேரி பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் என, சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பல கோடி ரூபாய்தரமணி, எம்.ஜி.ஆர்., சாலையில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலைக்கு விரைந்து செல்லும் வகையில், தரமணி முதல் வேளச்சேரி, விஜயநகர் ரயில் நிலையம் வரை, தண்டவாளம் அருகே சாலை அமைக்கும் பணியை, 10 ஆண்டுகளுக்கு முன் தெற்கு ரயில்வே திட்டமிட்டு துவக்கியது. இச்சாலை, 3.5 கி.மீட்டர் துாரம், 80 அடி அகலத்திற்கு,'மீடியன்' வசதியுடன் பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.

தரமணியில் இருந்து வேளச்சேரி வரை, இச்சாலைப் பணி பூர்த்தி அடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. அதே போல், வேளச்சேரியில் ரயில் தண்டவாளத்தை கடக்க, பல கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.இந்த சுரங்கப்பாதை, தரமணி- - வேளச்சேரி இணைப்பு சாலையில் இருந்து, வேளச்சேரி - -மவுன்ட் உள்வட்டச்சாலை; வேளச்சேரி ரயில் நிலையம் அருகே அமைவதாக இருந்த பஸ் நிலையத்தையும் அடையும் வகையில் நிறுவப்பட்டது.'ஆமை' வேகம்இந்நிலையில், புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதே போல், இச்சாலையில் குறிப்பிட்ட, சில நுாறு மீட்டர் துாரம் கடக்க, மழை நீர் வடிகால் பாலம் அமைக்க வேண்டும். அந்தப் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

இதனால், இச்சாலை அமைத்தும் போக்குவரத்து இல்லாமல் முடங்கி உள்ளது.வேளச்சேரி, விஜயநகர் பஸ் நிலையம் அருகே மேம்பாலப் பணி சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அந்த காலக்கட்டத்தில் இச்சாலை அமைத்திருந்தால், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், தென்னக ரயில்வே, இணைப்புச் சாலை திட்டத்தை கண்டு கொள்ளவே இல்லை.இதனால், கடந்த சில ஆண்டுகளாக, வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் தவித்து வருகின்றனர்.

பாலப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.இது குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. அதன் பலனாக, 2017ம் ஆண்டு அச்சாலையில், விடுபட்ட இடத்தில், 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான பாலப் பணிகள் துவக்கப்பட்டன.'ஆமை' வேகத்தில் பணிகள் நடந்து, தற்போது, 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.இப்பணியை விரைவில் முடித்து, இச்சாலை பராமரிப்பு பணியை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தரமணி- - வேளச்சேரி இடையே, ரயில்வே தண்டவாளம் ஒட்டிய இணைப்பு சாலை, குறிப்பிட்ட நேரத்தில் அமைத்திருந்தால், விஜயநகர் மேம்பாலப் பணி நடக்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் இருந்திருக்காது. தற்போது, அச்சாலையில், 90 சதவீதம் பணி முடிந்துள்ளது. இப்போதே மாநகராட்சி வசம் இச்சாலை ஒப்படைத்தால், பராமரிப்பு பணியை விரைவில் மேற்கொண்டு, போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சீரமைப்பு பணிகளை துவங்குவோம்.

மாநகராட்சி அதிகாரிகள்

தரமணி- - வேளச்சேரி இணைப்பு சாலையில், பாலப் பணி மட்டுமே மீதமுள்ளது. அப்பணியும் அக்., இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும். பின் மாநகராட்சி வசம் ஒப்படைக்க உள்ளோம். சுரங்கப்பாலத்தில் தேங்கி உள்ள நீரை வெளியேற்ற அமைக்கப்பட்ட மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. புதிய மின்மோட்டார் நிறுவிய பின், சுரங்கப்பாலத்தை சீரமைக்க முடியும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரயில்வே நிர்வாகம்

உடனடி நடவடிக்கை தேவைஇது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இந்த சாலையை இன்றளவில் பயன்படுத்த முடியாத அவலத்திற்கு, தென்னக ரயில்வேயின் மெத்தனப் போக்கே காரணம்.இப்போதே மாநகராட்சி வசம் சாலையை ஒப்படைத்தால், ரயில்வே துறையினர் தங்களின், 10 சதவீத பணியை முடிப்பதற்குள், மாநகராட்சியினர் சாலையை சீரமைத்து, மீடியன் விளக்குகள் பொருத்த வசதியாக இருக்கும்.இனியாவது தாமதிக்காமல் ரயில்வே நிர்வாகம், இச்சாலையை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும்.

அப்படி செய்தால் இச்சாலை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அதே போல, சுரங்கப்பாலத்தில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கியுள்ளது.அந்த நீரை அகற்றி, ரயில்வே தண்டவாளத்தை கடக்க வழி வகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X