உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
சி. ரமேஷ் குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முகலாயர் ஆட்சி காலத்தில் கோவில்கள் சிதைக்கப்பட்டு, அதன் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், கோவில்களில் கடும் கட்டுபாடுகளுடன், சிறு கொண்டாட்டமும் இல்லாமல் கடவுளை தரிசிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
முகலாயர் மன்னர்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்த போதும், ஹிந்து தர்மத்தை காக்க பல்லாயிரம் பேர் தங்கள் இன்னுயிரை தந்தனர். ஆட்சியாளர்களின் கொடுமை தாங்காமல், பலர் அவர்களின் மதத்திற்கு மாறி தங்களை காத்துக் கொண்டனர். ஆங்கிலேய ஆட்சியின் போதும், கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டது. ஹிந்து மத வழிபாட்டுக்கு பல்வேறு தடைகள் விதித்தனர். அவர்கள் சார்ந்த மதத்திற்கு மாறுவோருக்கு சலுகைகள் பல கொடுத்தனர்.
முகலாயரிடமும், ஆங்கிலேயரிடமும் பல ஒற்றுமைகள் இருந்தன.

* கோவில்களுக்கு மன்னர், மக்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வைர நகையை கொள்ளை அடிப்பது
* கோவிலின் தினசரி பூஜை மற்றும் சடங்குகளை நிறுத்துவது
* கடவுள் விக்ரகங்களை சேதப்படுத்துவது மற்றும் கடத்துவது
* கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு மற்றும் வரி விதிப்பது
* மத மாற்றம் செய்வது
* கோவிலில் பூஜை செய்வதை தங்கள் வாழ்க்கையாக கொண்டோரை தண்டித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது...
இப்படி இன்னும் கொடுமைகளை, முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் ஹிந்துக்கள் அனுபவித்தனர். நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்... ஹிந்துக்கள் இப்போதும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆங்கிலேயர், முகலாயர் கால ஆட்சி போலவே, இப்போதும் நடக்கிறது.
கோவில்கள் சிதைக்கப்படுகின்றன. செல்வம் கொள்ளை அடிக்கப்படுகின்றது. ஹிந்து மத வழிபாட்டிற்கு மட்டும் இடையூறு ஏற்படுத்தப்படுகிறது.
ஹிந்து கடவுள்களை அவமானப்படுத்துவது தொடர்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டணம் என்ற பெயரில் வரி விதிக்கப்படுகிறது. இதோ இப்போது, கோவிலில் உள்ள நகையை அபகரிக்கப் போகின்றனர். தமிழகத்தில் ஹிந்து மதம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என தெரியவில்லை. ஏனெனில், ஹிந்துக்களிடம் போராட்ட குணம் மறைந்து விட்டது. உணர்வும், வலிமையும் இல்லாத அனைத்தும் அழிந்து போகும் என்பதை, ஹிந்துக்கள் உணர வேண்டும்.