பொது செய்தி

தமிழ்நாடு

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில்

Added : அக் 06, 2021
Share
Advertisement
திண்டிவனம் : ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்தது.ஒலக்கூர் ஒன்றியத்தில் இன்று 6ம் தேதி நடைபெற உள்ள தேர்தலையொட்டி, பல ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நேற்று முன்தினம் இரவிலிருந்து துவங்கியது.ஒன்றியத்தில் மொத்தமுள்ள 181 ஓட்டுச்சாவடிகளில் பதற்றம்

திண்டிவனம் : ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்தது.

ஒலக்கூர் ஒன்றியத்தில் இன்று 6ம் தேதி நடைபெற உள்ள தேர்தலையொட்டி, பல ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நேற்று முன்தினம் இரவிலிருந்து துவங்கியது.ஒன்றியத்தில் மொத்தமுள்ள 181 ஓட்டுச்சாவடிகளில் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ள 44 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.அதே போல் மீதமுள்ள ஓட்டுச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா நேற்று காலையிலிருந்து பொருத்தும் பணி நடைபெற்று வந்தாலும், சாரம், மேல்பாக்கம் உள்ளிட்ட பல ஓட்டுச்சாவடிகளில் நேற்று பிற்பகல் வரை கேமரா பொருத்தப்படவில்லை.இதுபற்றி தேர்தல் அதிகாரி தரப்பில் கேட்ட போது, கேமரா பொருத்தும் பணி பகுதி, பகுதியாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X