பொது செய்தி

தமிழ்நாடு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சத்திரம் : பெரியப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பகுதியில், இந்த ஆண்டு சுமார் 300 ஏக்கர் அளவில் குறுவை பருவத்திற்கு நெல் பயிரிட்டனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க
 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

புதுச்சத்திரம் : பெரியப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பகுதியில், இந்த ஆண்டு சுமார் 300 ஏக்கர் அளவில் குறுவை பருவத்திற்கு நெல் பயிரிட்டனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென அரசுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.தற்போது அறுவடை செய்த நெல்லை, கடந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கிய இடத்தில் குவித்து வைத்துள்ளனர்.

நேற்று பெய்த மழையால் குவித்து வைத்த நெல் குவியல்களில் தண்ணீர் புகுந்து வீணாகும் நிலை உள்ளது. சுமார் 50 க்கும் மேற்பட்ட நெல் குவியல்கள் உள்ளதால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வீணாகும் நிலை உள்ளது. இங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X