பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு மழை தடுக்க தவறிய தேர்தல் பறக்கும் படையினர்

Added : அக் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அலட்சியத்தால், வாக்காளர்கள் காட்டில் தாராள பரிசு மழை பொழிகிறதுவிழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று 6ம் தேதி மற்றும் வரும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதில், இன்று முதல்கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில்



விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அலட்சியத்தால், வாக்காளர்கள் காட்டில் தாராள பரிசு மழை பொழிகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று 6ம் தேதி மற்றும் வரும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதில், இன்று முதல்கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஓட்டுப்பதிவு 1,569 ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கிறது.மாவட்டத்தில் தேர்தலையொட்டி, பரிசு பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்க தலா 3 சுழற்சி அடிப்படையில் 18 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுக்கள், 24 மணி நேரமும் வாகன சோதனை செய்கின்றனர். சோதனையின்போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச்செல்லும் தொகை, பரிசு பொருட்கள், மதுபானங்கள் என அனைத்தையும் பறிமுதல் செய் கின்றனர்.ஆனால், இக்குழுவினர் இதுவரை மாவட்டத்தில் பெரிய அளவில் தேர்தல் பரிசு பொருட்கள், பணத்தை பறிமுதல் செய்யவில்லை. சட்டசபை மற்றும் எம்.பி., தேர்தல்களில் கண்காணிப்பது போன்று பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையை மேற்கொள்ளவில்லை.இன்று, முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் ஒன்றியங்களில் வாக்காளர்களுக்கு சில்வர் பாத்திரம், பணம், தங்க மூக்குத்தி என பரிசு பொருட்களை தங்குதடையின்றி வேட்பாளர்கள் வழங்கினர்.உள்ளாட்சித் தேர்தல் என்பதால், கிராமங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் பங்கிற்கு பரிசு பொருட்களை வழங்கினர்.இதனால், பரிசு பொருட்கள் குறித்து யாரும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவில்லை.

மேலும், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறும் பகுதிகளிலும், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கும் நடவடிக்கையில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டியுள்ளனர்.இதற்காக, பரிசு பொருட்களை எடுத்துவரும் முயற்சியிலும், ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தேர்தல் பறக்கும் படையினர், தங்களின் சோதனையை தீவிரப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X