இடைவிடாது பெய்த மழையால் மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடைவிடாது பெய்த மழையால் மக்கள் அவதி

Added : அக் 06, 2021
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று இடைவிடாத பெய்த மழையால் மக்கள் அவதியடைந்தனர்.தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலுார், பெரம்பலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் முழுவதும் சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல்
 இடைவிடாது பெய்த மழையால் மக்கள் அவதி

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று இடைவிடாத பெய்த மழையால் மக்கள் அவதியடைந்தனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலுார், பெரம்பலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் முழுவதும் சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று முழுவதும் கடலுார் மாவட்டம் முழுவதும் இடைவிடாது மழை பெய்தது.

நேற்று காலை 8:30 மணி வரையில் பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக 38.6 மி.மீ., மழை பதிவாகியது. வேப்பூரில் 7, அண்ணாமலைநகர் 6.4, காட்டுமயிலுார், புவனகிரி, சிதம்பரத்தில் 6 மி.மீட்டர், கொத்தவாச்சேரி 4, லால்பேட்டை 3.3, ஸ்ரீமுஷ்ணம் 3.1, காட்டுமன்னார்கோவில், வானமாதேவி, சேத்தியாத்தோப்பில் தலா 3, பெலாந்துரை மற்றும் கடலுாரில் 2.2, குப்பநத்தம், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, கீழச்செருவாய் ஆகிய இடங்களில் 2 மி.மீ., கடலுார் கலெக்டர் அலுவலகம் 1. 2 மி.மீ.,, என, 103 மி.மீட்டர் மழை பதிவாகியது.
இடைவிடாது பெய்த மழையால் கடலுாரின் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தென் மேற்கு வங்க கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X