பொது செய்தி

தமிழ்நாடு

மழை நேரத்தில் 'ஸ்டே'ஒயர் அருகே செல்ல வேண்டாம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை

Added : அக் 06, 2021
Share
Advertisement
கடலுார் : மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் அருகே செல்ல வேண்டாம் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சத்திய நாராயணன் எச்சரித்துள்ளார்,அவரது செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவ மழையின் போது மின் விபத்துக்கள் ஏற்படாமல் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், உடைந்த மின் கம்பங்கள், சேதமடைந்து வெளியே தெரியும்

கடலுார் : மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் அருகே செல்ல வேண்டாம் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சத்திய நாராயணன் எச்சரித்துள்ளார்,

அவரது செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவ மழையின் போது மின் விபத்துக்கள் ஏற்படாமல் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், உடைந்த மின் கம்பங்கள், சேதமடைந்து வெளியே தெரியும் புதைவட கம்பிகள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை பார்த்தவுடன் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு நேரிலோ, தொலைபேசி மூலமோ தெரிவிக்கலாம்.

கடலுார் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் செயல்படும் சேவை மையத்தை எந்த நேரத்திலும் 94458 56039 என்ற மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம்.கடலுார் மாவட்டத்தில் 1912, 18004254116 என்ற இலவச அழைப்பு தொலைபேசி மற்றும் 94987 94987 எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு மின் தடை குறித்த புகார்களை கணினி மயமாக்கப்பட்ட புகார் மையத்தில் பதிந்தால் மின் தடை நிவர்த்தி செய்யப்படும். மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் அருகே செல்ல வேண்டாம்.

ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை இயக்கக் கூடாது. மின் கம்பம் மற்றும் அவற்றை தாங்கும் கம்பிகளில் கால்நடைகளைக் கட்ட வேண்டாம். ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின்சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு தர வேண்டும். மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஒயர்களின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்க கூடாது.

விவசாயிகள் நிலத்தில் பயிர்களை காப்பாற்ற மின் வேலி அமைப்பதன் மூலம் அப்பாவி மக்கள் விபத்தில் சிக்குகின்றனர். விவசாய நிலத்தில் மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம். இவற்றை மீறினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X